விஸ்வாசம், பேட்ட ஆகியப் படங்கள் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆவதை அடுத்து திரையரங்கங்களைக் கைப்பற்றுவதில் மிகப்பெரிய போடி உண்டாகியுள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் என 6 மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் படத்திற்கு முன்பணமெல்லாம் கொடுத்து புக் செய்து வைத்திருந்தனர். எனவே பெரும்பாலான தியேட்டர்களில் விஸ்வாசம் புக் செய்யப்ப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக பொங்கலுக்கு பேட்ட படமும் ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் தர்மசங்கடமான சூழல் உருவானது. இதனால் பேட்ட படத்திற்கு அவர்கள் எதிர்பார்க்கும் அளவிலான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவானது. அதனால் சன்பிக்சர்ஸ் பேட்ட படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு மாற்றிவிட்டது.
அதையடுத்து விஸ்வாசம், பேட்ட படக்குழுவினர் ரிலிஸ் வேலைகளில் தீவிரமாக வேலைகளில் இறங்கி வருகின்றனர். பேட்ட படத்தை சன் பிக்ஸர்ஸ் சோஷியல் மீடியாக்களில் விளம்பரப்படுத்த விஸ்வாசம் குழுவினரோ நேரடியாக தியேட்டர்களிலேயே சென்று விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களிலும் இரு நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் நடிகரின் புகழ் பாட ஆரம்பித்துள்ளனர்.
மெல்ல இந்த விவாதங்கள் சீண்டலாக மாற ஆரம்பித்துள்ளனர். அஜித் ரசிகர்கள் பேட்ட படத்தைத் தாக்குவதும், ரஜினி ரசிகர்கள் விஸ்வாசம் படத்தைத் தாக்குவதும் ஆரம்பித்திருக்கிறது. இந்த சீண்டல்களில் எண்ணெய ஊற்றும் விதமாக சன் பிக்சர்ஸ் ஒரு திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறது. டிவிட்டரில், இன்று ரஜினியின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ’கொஞ்சம் ஒதுங்கிரு, ஓடிப் பதுங்கிரு, வர்றது தலைவரு.’ என்ற் கேப்ஷனையும் போட்டிருக்கிறது.
இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் சந்தோஷமும், அஜித் ரசிகர்கள் எரிச்சலும் அடைந்துள்ளனர். படம் ரிலிஸுக்கு முன்பே இவ்வளவு என்றால் படம் ரிலிஸுக்குப் பின் என்ன ஆகுமோ ?