Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் பெர்சனல் மேக்-அப் மேன் ஏவிஎம் முத்தப்பா!

Advertiesment
ரஜினியின் பெர்சனல் மேக்-அப் மேன் ஏவிஎம் முத்தப்பா!
, புதன், 19 டிசம்பர் 2018 (11:29 IST)
பழம்பெரும் மேக்கப் மேன் "ஏவிஎம் முத்தப்பா" ரஜினியின் பெர்சனல் மேக்கப் மேனகாவும் ராசியான மனிதராகவும் இருந்துள்ளார்.

 
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தில் இணைந்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் மேக்கப் மேன் முத்தப்பா. சிவாஜி கணேஷன் நடித்த பராசக்தி படத்தில் அவருக்கு மேக்கப் போட்டவர் முத்தப்பா. அதேபால் நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த களத்தூர் கண்ணம்மா படத்துக்கும் இவர்தான் மேக்கப் மேன்.
 
60 ஆண்டுகளாக திரை அனுபவம் பெற்ற இவர்,  திரை ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களிடம் மேக்-அப் மேனாக பணியாற்றியிருக்கிறார்.
 
ஒரு கட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். ரஜினிகாந்த் இவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.
 
முரட்டுக்காளை, தம்பிக்கு எந்த ஊரு, பாண்டியன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்திற்கு மேக்கப்மேனாகப் பணியாற்றிய முத்தப்பா, ரஜினியின் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார்.மேலும் இவரைப் பற்றி ஒப்பனைக்காரன் என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது. 
 
முத்தப்பாவின் மூத்த மகன் மனோகர், நடிகர் ரஜினிகாந்தின் முதல் திரைப்படமான பைரவியில் மேக்கப் மேனாக பணியாற்றியிருக்கிறார்.
 
கடந்த 20 வருடங்களாக உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி2 வில் ஹீரோயின் யார்? சாய் பல்லவியா அறந்தாங்கி நிஷாவா?