Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி படத்தை தயாரிக்க தயங்கும் சன் பிக்சர்ஸ்!

ரஜினி படத்தை தயாரிக்க தயங்கும் சன் பிக்சர்ஸ்!
, திங்கள், 1 அக்டோபர் 2018 (14:04 IST)
ரஜினிகாந்த் தமிழ் சினிமா வசூல் மன்னன் என்பதால் அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும், வயதானாலும் ரஜினியின் மாஸ் துளியு குறையவில்லை.
 
இந்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சரஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்தது, இந்த படத்தில் ரஜினி முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவிற்கு மோசடி பேர்வழியுடன் தொடர்பா? வெளியான அதிர்ச்சித் தகவல்