ஆபாசமானக் காட்சிகள் கொண்ட கல்யாண வீடு சீரியல்– சன் டி வி –க்கு 2.5 லட்ச ரூபாய் அபராதம் !

புதன், 18 செப்டம்பர் 2019 (08:10 IST)
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் இடம்பெற்ற கூட்டு பலாத்காரக் காட்சிகள் மற்றும் வசனங்களுக்காக 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு கல்யாணவீடு என்ற மெகாத் தொடர் ஒளிப்பரப்பப் பட்டு வருகிறது. இந்த சீரியலில் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிப்பரப்பப் பட்ட எபிசோட்களில் கூட்டுப்பலாத்காரக் காட்சிகளும் அது பற்றிய தீவிரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன.

வீட்டில் குழந்தைகள் உள்பட அனைவரும் பார்க்கும் இந்த சீரியலில் இத்தகையக் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றதால் அதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்துப் பலரும் அந்த காட்சிகள் பற்றி புகார் கூறினர்.  பி.சி.சி.சி அமைப்பு இதை ஏற்று சன் டிவிக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதமும் சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்யாண வீடு சீரியல் ஒளிப்பரப்பாகும் போது 30 வினாடிகள் கொண்ட மன்னிப்பு காட்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டுமெனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய விஜய் தேவரகொண்டா: 4 நாயகிகளுடன் டூயட்!