Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதற்கும் துணிந்தவன் படக்குழு வெளியிட்ட செம்ம அப்டேட்… வெளியான ஹிட் பாடலின் வீடியோ!

எதற்கும் துணிந்தவன் படக்குழு வெளியிட்ட செம்ம அப்டேட்… வெளியான ஹிட் பாடலின் வீடியோ!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (18:00 IST)
எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்ற சும்மா சுர்ர்னு பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலிஸானத். இந்த படம் ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

ஆனால் அதே நேரம் வசூலில் சோடை போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்க உள்ள நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற சும்மா சுர்ருனு என்ற ஹிட் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா நடிக்கும் யசோதா… ரிலீஸ் தேதி அறிவிப்பு!