லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:49 IST)
தமிழ் சினிமாவையே உலுக்கிய முதல் கொலை வழக்கு என்றால் அது லஷ்மிகாந்தன் கொலை வழக்குதான் என்று சொல்லலாம். பத்திரிக்கையாளரான லஷ்மிகாந்தன் சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பல கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தார். அதில் பல தகவல்கள் அப்பட்டமான பொய் என்று குற்றம் சாட்டப்பட்டன.

இந்நிலையில் இவர் மர்மமான முறையில் கொல்லப்பட நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகள் இல்லை என நிருபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் இந்த கைது தமிழ் சினிமாவில் அவர்களது எதிர்காலத்தையே பாதித்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கை மையமாக வைத்து இயக்குனர் தயாள் பத்மநாபன் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை 2M சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்போது இந்த திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அரசியல் ஆய்வாளர் சுப வீரபாண்டியன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்புப் படத்துக்கு முன்பே ரிலீஸாகிறதா சூர்யா 46?

வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

எனக்கும் அந்த ஆசை துளிர்விட்டுள்ளது… மருதநாயகம் குறித்துக் கமல் பாசிட்டிவ் அப்டேட்!

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

அடுத்த கட்டுரையில்
Show comments