எழுத்தாளர் சு சமுத்திரம் எழுதி பரவலாக கவனம் பெற்ற ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது.
தமிழில் தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் சு சமுத்திரம். அவர் எழுதிய நாவல்களில் ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் இலக்கிய உலகில் பிரபலமான நாவல். அதில் வரும் உலகம்மை கதாபாத்திரம் தலித் பெண்களின் ஒரு பிரதிநிதியாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் எழுதி பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் இப்போது உலகம்மை என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது.
உலகம்மை கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்க, இந்த படத்தை இயக்குனர் விஜய் பிரகாஷ் இயக்குகிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது அதிகமாகி உள்ளது.