Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடையாறு ஸ்கூல்ல எனக்கும் அந்த கொடுமை நடந்துச்சு - மனம் திறந்த கௌரி கிஷன்!

அடையாறு ஸ்கூல்ல எனக்கும் அந்த கொடுமை நடந்துச்சு - மனம் திறந்த கௌரி கிஷன்!
, புதன், 26 மே 2021 (13:07 IST)
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜகோபாலனை கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதறகு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் 96 புகழ் நடிகை கௌரி கிஷன், #SpeakUpAgainstHarrasment என கேப்ஷன் கொடுத்து தான் படித்த அடையார் பள்ளி அனுபவங்களை குறித்து பதிவிட்டுள்ளார். 
 
அதவாது குழந்தை பருவத்தில் கஷ்டப்பட்டதை நினைத்து பார்ப்பது சுகம் இல்லை. அதிலும் குறிப்பாக பள்ளியில் படித்த காதலத்தில் என்னை போன்று பல மாணவிகள் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. பள்ளிகள் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். மாறாக பயப்படச் செய்யக் கூடாது. 
 
பி.எஸ்.பி.பி.யில் நடந்த பாலியல் தொல்லை, மோசமான நடவடிக்கை தொடர்பான செய்திகளை பார்த்தபோது நான் படித்த அடையாற இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளி எனக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது தான் நினைவுக்கு வருகிறது. அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது ஒரு குழந்தையின் சுய மரியாதையை பாதிக்கும். அந்த ஸ்கூலில் படித்த நான் உள்பட பலருக்கும் நான் மேற்கூரிய எல்லாம் நடந்திருக்கிறது.
 
எங்களை கஷ்டப்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை சொல்ல நான் விரும்பவில்லை. பள்ளி சூழல் மிகவும் மோசமாக இருந்தது. என்னை போன்று கஷ்டப்பட்ட அனைவருக்காகவும் வருத்தப்படுகிறேன். பிஎஸ்பிபி மாணவிகளுக்கு நடந்ததை கேட்டு மன அழுத்தமாக இருக்கிறது.
 
பள்ளி சூழல் சரியில்லாதபோதிலும் பலர் வாழ்க்கையில் நல்லபடியாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வரும் வடுக்கள் தான் பெரியவர்களான பிறகு நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இதை எல்லாம் நினைவுகூர்ந்தது வேதனையாக இருந்தாலும், ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன். பாதிக்கப்பட்ட பலரும் முன்வந்து இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி செய்தால் தான் இனியாவது மாணவ, மாணவியருக்கு நாம் சந்தித்த பிரச்சனைகள் ஏற்படாது என்று நம்பலாம் என கூறி இந்த பதிவில் சின்மயியை டேக் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தேவி போல இருப்பது ஆசிர்வாதம்தான்… வனிதா விஜயகுமார் மகிழ்ச்சி!