Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

Advertiesment
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

Siva

, திங்கள், 17 மார்ச் 2025 (18:57 IST)
சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இ

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஸ்டண்ட் அமைத்தவர் கேச்சா என்றும், உலகளவில் பிரபலமான ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவரான இவர் ‘Ong Bak 2’, ‘Baahubali 2’ உள்ளிட்ட பல சர்வதேசத் தரம் வாய்ந்த திரைப்படங்களில் பணியாற்றியவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த கேச்சா, சண்டைக் காட்சிகளை யதார்த்தமாகவும், பரபரப்பாகவும் வடிவமைப்பதில் சிறப்பு பெற்றவர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவருடன் தொடர்ந்து வீடியோ காலில் இணைந்து, படத்திற்கேற்ப தேவைப்படும் சண்டைக் காட்சிகளை சிறப்பாக உருவாக்க பல்வேறு விவாதங்கள் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநரின் முக்கிய கோரிக்கை, ஒவ்வொரு சண்டைக் காட்சியும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட கேச்சா, படத்தின் கதைக்களம், உணர்வுப் பின்னணி ஆகியவற்றை நுணுக்கமாக புரிந்து கொண்டு, புதுமையான சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

திரையரங்குகளில் இந்த சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், ‘ரெட்ரோ’ படத்தின் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!