Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

Prasanth Karthick
வியாழன், 21 நவம்பர் 2024 (11:37 IST)

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தால் பாதிக்கப்பட்டதாக இழப்பீடு கேட்டு மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் அமரன். படம் வெளியாகி 21 நாட்களை கடந்தும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூலிலும் 200 கோடியை தாண்டியுள்ளது.

 

இந்நிலையில் அமரன் படத்தின் மீது பொறியியல் மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் ஒரு மொபைல் எண் காட்டப்பட்டுள்ளது. அந்த எண் உண்மையில் பொறியியல் கல்லூரி மாணவர் வாகீசன் என்பவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல் எண்.

 

ஆனால் அதை சாய் பல்லவியின் மொபைல் எண் என நினைத்துக் கொண்டு படம் பார்ந்த பலர் அந்த எண்ணுக்கு கால் செய்து வாகீசனுக்கு தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் போன் கால்களால் தன்னால் தூங்கவோ, படிக்கவோ முடியவில்லை என்றும், தனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள வாகீசன், இதற்காக பட நிறுவனம் தனக்கு ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments