Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

300 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட சிவகார்த்திகேயனின் ‘அமரன்’..!

Advertiesment
300 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட சிவகார்த்திகேயனின் ‘அமரன்’..!

vinoth

, செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:24 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31, தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அமரன் படம் முதல் நாளில் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து முதல் நாளிலேயே பிளாக்பஸ்டர் ஹிட்டை அறிவித்தது.

அதன்பின்னர் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. வெற்றிகரமாக 100, 200 மற்றும் 250 கோடி ரூபாய் வசூல் என்று முன்னேறிச் சென்றது. கங்குவா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்ற பின்னர் அமரன் மீண்டும் பிக்கப் ஆனது. இந்நிலையில் 19 நாட்களில் இப்போது 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லால் சிங் சத்தா படத்தின் மிகப்பெரிய குறையே நான்தான்… அமீர் கான் ஒப்புதல்!