இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்: சிம்புவின் இரங்கல் அறிக்கை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:07 IST)
விக்ரம் நடித்த ’கிங்’, தனுஷ் நடித்த ’திருடா திருடி’, சிம்பு நடித்த ’மன்மதன்’, விவேக் நடித்த ’சொல்லி அடிப்பேன்’, உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் நேற்று இரவு 10.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகர் சிம்பு தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்‌. "மன்மதன்‌" படம்‌ என்‌ வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக்‌ கொண்டது.
 
என்‌ மீது மிகுந்த அன்பு கொண்டவர்‌ திரு. கிருஷ்ணகாந்த்‌ அவர்கள்‌. "மன்மதன்‌" படத்தை என்‌ மீது நம்பிக்கை வைத்து இயக்கச்‌ சொன்னவர்‌. நீங்க ஸ்கிரிப்ட்‌ பண்ணுங்க. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்‌ தனிப்பட்ட முறையில்‌ என்‌ மீது மிகுந்த எதிர்பார்ப்பைக்‌ கொண்ட நல்ல மனிதர்‌. அவரது மரணம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
 
கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்‌. 
 
இவ்வாறு சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments