Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு-சுசீந்திரன் படத்தை தயாரிப்பது யார்? பரபரப்பு தகவல்

சிம்பு-சுசீந்திரன் படத்தை தயாரிப்பது யார்? பரபரப்பு தகவல்
, புதன், 30 செப்டம்பர் 2020 (07:49 IST)
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்க உள்ள கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை முப்பதே நாட்களில் சுசீந்திரன் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பது சிம்புவே என்றும் அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் சிம்புவின் சம்பளம் இல்லாமல் ரூ.5 கோடியில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் இந்த படத்துக்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
முப்பதே நாட்களில் சுசீந்திரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன்பின்னர் அவர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஹரி இயக்கிய ‘கோவில் படத்திற்கு பின்னர் சிம்பு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வருடம் கழித்து சம்பளம் கொடுத்த விஜய் டிவி: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்