Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவை பார்த்து வியந்தாரா இயக்குனர்? மீண்டும் ஏமாற்றப்படும் ரசிகர்கள்!

Advertiesment
சிம்புவை பார்த்து வியந்தாரா இயக்குனர்? மீண்டும் ஏமாற்றப்படும் ரசிகர்கள்!
, வியாழன், 1 அக்டோபர் 2020 (10:52 IST)
சமீபகாலமாக நடிகர் சிம்புவின் உடல் எடை மிகவும் அதிகரித்து வருவது தெரிந்ததே. குறிப்பாக ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் அவருடைய உடல் எடையைப் பார்த்து அவரது ரசிகர்களே கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சிம்பு தாய்லாந்து சென்று உடல் எடையை குறைத்து விட்டதாக கூறப்பட்டது. அவர் தாய்லாந்தில் இருந்து தனது சகோதரரின் திருமணத்திற்கு வந்த போது அவரது உடல் எடை உண்மையிலேயே குறைந்து இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவரது உடல் எடை ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் கூடி விட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றப்பட்டதாக கருதினர்
 
இந்த நிலையில் தற்போது கேரளாவில் உடற்பயிற்சியில் சிம்பு ஈடுபட்டு வருவதாகவும் சமீபத்தில் அவரை பார்த்த பிரபல இயக்குனர் ஒருவர் வியந்து சிம்பு இவ்வளவு ஒல்லியாகவும் அழகாகவும் மாறி விட்டதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
ஆனால் இந்த தகவலும் வதந்தி தான் என்றும் சிம்புவின் உடல் எடை பெரிதாக மாறவில்லை என்றும் அவரது தரப்பினர் வேண்டுமென்றே சிம்புவுக்காக பில்டப் செய்து வருவதாகவும் கோலிவுட் திரையுலகினர் சிலர் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ‘க/பெ ரணசிங்கம்: புதிய தகவல்!