Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதை திருட்டு செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகம்- இயக்குனர் மோகன் ஜி

mohan g
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:32 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மோகன் ஜி. இவர்  இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பழைய வண்ணாரப்பேட்டை.

இப்படத்தை அடுத்து, திரவுபதி, ருத்ர தாண்டவம், ருத்ர தாண்டவம் போன்ற உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில், செல்வராகவன் நட்டி   உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் பகாசூரன்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவர் தன் சமூக வலைதளத்தில் மக்கள்  பிரச்சனைகளை படமா எடுக்கிறவங்கள விட கதை திருட்டு செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’ஒரு படத்தை ஓட வைக்கவும், காலி பண்ணவும், என்ன என்ன வேலையெல்லாம் பாக்குறாங்க. நல்ல கதை எடுத்தாலும்,  கொள்கை, அவரவர் அரசியல் விருப்பம் பொறுத்து தான் விமர்சனம் வைக்கபடுது. மக்கள்  பிரச்சனைகளை படமா எடுக்கிறவங்கள விட கதை திருட்டு செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகம். உண்மையான வெற்றி எளிதல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’லியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்..!