Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ …இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது” – செல்வராகவனின் ட்விட்டர் தத்துவம்!

webdunia
வெள்ளி, 26 மே 2023 (10:38 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் செல்வராகவன் டிவிட்டரில் அடிக்கடி தனது அனுபவப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அப்படி இப்போது “அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை ஷர்ட்டில் கடல் நடுவே… ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!