Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

Advertiesment
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். 
தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார். இந்நிலையில் வரலாற்றின் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
43 வயதான இட்ரிஸ் எல்பா, மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக உலகத்திற்கு அறிமுகமானவர். ஆரம்பகாலத்தில் படங்களில் துணை நடிகராக நடித்த இவர் தனது நடிப்பு திறமையால் கதாநாயகனாக தற்போது வளம் வருகிறார். இவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்துள்ளனர். பெருபாலானோர் இனவெறியை தூண்டும் விதமாக, கறுப்பினத்தவர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியற்றவர் என்றும், இவர் மிகவும் வயதானவர் என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்நேரமும் போன் பேசிக்கொண்டிருந்த மனைவி - காதை அறுத்த கணவன்