Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

S.S.ராஜமௌலி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பாகுபலியின் சொல்லப்படாத கதையை ஒரு புதிய அத்தியாயமாக, ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ மூலம் வெளிவர உள்ளது!

Advertiesment
SS Rajamouli

J.Durai

, வெள்ளி, 3 மே 2024 (12:52 IST)
கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியா தயாரிப்பான, 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' பிரத்தியேகமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப உள்ளது.
 
பாகுபலி இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஃபேண்டஸி தொடர்களில் ஒன்றாகும்,இது ஒரு கதை மட்டுமல்ல,ஒரு பிரபஞ்சம். 
 
பாகுபலி உலகில் கேள்விப்படாத, காணாத, சாட்சியமில்லாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. 
 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்' இந்த ஃபிரான்சைஸியின் முன்பகுதியை அறிவிக்கிறது.
 
'பாகுபலி: தி கிரவுன் ஆஃப் பிளட்’, பாகுபலி மற்றும் பல்லால்தேவ் 'ரக்தேவா' என்று அறியப்படும் மர்மமான போர்தலைவனுக்கு எதிராக பிரம்மாண்டமான மகிஷ்மதி ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் பாதுகாக்க கைகோர்க்கும் கதையாகும்.
 
கிராஃபிக் இந்தியா மற்றும் அர்கா மீடியா தயாரிப்பான பாகுபலி:கிரவுன் ஆஃப் பிளட், தயாரிப்பில் தொலைநோக்கு பார்வை கொண்ட S.S.ராஜமௌலி,ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா , ஜீவன் J. காங் & நவின் ஜான் ஆகியோரால் இயக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது, இந்த அற்புதமான காவியக்கதை அற்புதமான சாகசம், சகோதரத்துவம், துரோகம், முரண்பாடு மற்றும் வீரத்துடன் பார்வையாளர்களை இதுவரைக் காணாத அனிமேஷன் உலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது.
 
பாகுபலியின் பிரம்மாண்டம், சகோதரத்துவம் மற்றும் மோதலின் கதையைக் காண, ஆற்றல் நிரம்பிய இந்த அதிரடித் தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 10, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
 
இது குறித்து ..
 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் & HSM என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்,டிஸ்னி ஸ்டாரின் பிரிவின் தலைவர் கௌரவ் பானர்ஜி கூறியது ...
 
 “பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் உடனான இந்த உரிமையை ஆழமாக ஆராய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமகால கதைசொல்லலில் அனிமேஷனின் முக்கிய பங்கை அங்கீகரித்து, பாகுபலி மற்றும் தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான் போன்ற கவர்ச்சிகரமான கதைகளை எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
 
கிராஃபிக் இந்தியாவுடனான எங்கள் தொடர்பை மேம்படுத்தும் அதே வேளையில், பெரியவர்களுக்கான அனிமேஷன் வகையைத் தொடர்ந்து செழுமைப்படுத்துவதும் பார்வையாளர்களைக் கவருவதும் எங்கள் குறிக்கோளாகத் திகழ்கிறது” என்று கூறினார்.
 
பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் படத்தை உருவாக்கியவரும் தயாரிப்பாளருமான S.S.ராஜமௌலி கூறியது...
 
“பாகுபலியின் உலகம் மிகப் பெரியது, அதற்கு சரியான அறிமுகமாக திரைப்பட உரிமை இருந்தது. இருப்பினும், ஆராய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது, அதில்தான் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் வருகிறது. 
 
இந்தக் கதை முதன்முறையாக பாகுபலி மற்றும் பல்லாலதேவாவின் வாழ்க்கையில் அறியப்படாத பல திருப்பங்களையும், இரு சகோதரர்களும் மகிஷ்மதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் நீண்ட காலமாக மறந்துபோன ஒரு இருண்ட ரகசியத்தையும் வெளிப்படுத்தும்.
 
இந்த புதிய அத்தியாயத்தை பாஹுவின் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,மேலும் இந்த கதையை அனிமேஷன் வடிவத்தில் கொண்டு வருகிறோம், இது பாகுபலியின் உலகிற்கு புதிய, அற்புதமான தோற்றத்தைக் கொண்டுவருகிறது. ஆர்கா மீடியாவொர்க்ஸ் மற்றும் நானும் ஷரத் தேவராஜன், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் நாங்கள் குழந்தைகளுக்கு அப்பாற்பட்ட பரந்த பார்வையாளர்களுக்காக இந்திய அனிமேஷனை மாற்றியமைக்கிறோம்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"தாத்தா"குறும்படம் விமர்சனம்!