மகேஷ் பாபு படத்துக்காக 50 கோடி ரூபாயில் செட்… வாரணாசியை ரி க்ரியேட் செய்யும் ராஜமௌலி!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (10:48 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

சமீபத்தில் ஒடிசாவில் சிலக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்துக்காக 50 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைக்கவுள்ளார் ராஜமௌலி. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் வாரணாசி நகரத்தை மறு உருவாக்கம் செய்யும் வகையில் இந்த செட் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments