Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் கணவர் 30 வயதில் மரணம்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:50 IST)
சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் மரணமடைந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனவர் சுருதி சண்முக பிரியா. இவர், கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் தன் நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகும் நிலையில், சுருதியின் கணவர் அரவிந்த்  மாரடைப்பால் காலமானார்.

இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு ‘’மிஸ்டர் தமிழ்நாடு’’ பட்டம் வென்றவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலடுக்கம் வந்தால் கூட ரெண்டு நாளில் மறந்துடுவாங்க.. ஆனா என் நடுக்கம்… விஷால் ஜாலி பதில்!

விடாமுயற்சி என்னோட கதை இல்லை… ஹாலிவுட் பட ரீமேக் சம்மந்தமான கேள்விக்கு மகிழ் திருமேனி பதில்!

மிடில் க்ளாஸ் ‘குடும்பஸ்தன்’ ஆக மணிகண்டன்… இன்று வெளியாகும் டிரைலர்!

பரோட்டாவில் வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி… பாண்டிராஜ் படம் பற்றி கொடுத்த அப்டேட்!

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்… மத கஜ ராஜா சக்ஸஸ் மீட்டில் அப்டேட் கொடுத்த விஷால்!

அடுத்த கட்டுரையில்
Show comments