Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மையோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சமந்தா..?

மையோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சமந்தா..?
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அந்த சிகிச்சைகளில் இன்னும் அவர் முழுமையாக் உடல்நலம் அடையவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பாலி தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அட்வைஸால் மீண்டும் நடந்த லால் சலாம் ஷூட்டிங்!