Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீர்த்தி சுரேஷுக்கு சவால்விடும் ஸ்ரீரெட்டி

Advertiesment
கீர்த்தி சுரேஷுக்கு சவால்விடும் ஸ்ரீரெட்டி
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:04 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர்கள் மீது வரிசையாகப் பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடுத்துள்ளார்.


கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் முன்னால் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களுக்கு நீதி கேட்கும் விதமாக தொலைகாட்சி மற்றும் தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி அரைநிர்வாணப் போராட்டம் நடத்தினார். அது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தனக்கு வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றியவர்களின் பெயரையும் ட்விட்டரில் வரிசையாக வெளியிட்டு வந்தார். அதில் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏ ஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி போன்றோரின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீ ரெட்டி தமிழ்ப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
webdunia


அண்மையில் நடைபெற்ற சண்டக்க்கோழி இசை வெளியீட்டு விழாவில் கல்ந்துகொண்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் ஸ்ரீ ரெட்டி குறித்தும் அவர் நடித்து வரும் திரைப்படம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால் ‘ ஸ்ரீ ரெட்டி படத்தில் நடித்து வருவது சந்தோஷமான விஷயம். அந்தப் படத்தில் அவர் கூட நடிக்கும் நடிகர்கள் அணைவரும் சிசிடிவி கேமாராக்களை எல்லா இடத்திலும் பொருத்திக்கொள்வார்கள். அது ஸ்ரீரெட்டிக்குப் பாதுகாப்பளிக்க அல்ல. ஸ்ரீ ரெட்டியிடம் இருந்து தங்களைப் பாதுக்கத்துக் கொள்ள’ என்று கேலியாக பதிலளித்தார். விஷால் பேசும் போது அருகில் அமர்ந்து இருந்த கீர்த்தி சுரேஷ் இதைக் கேட்டு சிரித்தார்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீரெட்டி 'விஷால் என்னைக் கேலி செய்யும்போது கீர்த்தி சுரேஷ் சிரிக்கிறார். நீங்கள் எப்போதுமே உச்சத்தில் இருக்க மாட்டீர்கள். ஒருநாள் உங்களுக்குப் போராடுபவர்களின் வலி புரியும். உங்களின் சிரிப்பை என்றும் மறக்க மாட்டேன்.' என தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜுனின் தமிழ் படம் விரைவில் தொடக்கம்?