Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சண்டக்கோழி 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'சண்டக்கோழி 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வியாழன், 27 செப்டம்பர் 2018 (21:13 IST)
விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் நாளை அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் விஷால் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்,. ராஜ்கிரண், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவக்கார்த்திக்கேயன் நடிப்பில் மோதி விளையாடு பாப்பா -எப்படி உள்ளது?