மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியிடப்படும் என்று போனிகபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1967 ஆம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரீதேவி.
அதன்பின்னர், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல படங்களில், ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
இந்தி சினிமாவுக்குச் சென்ற அவர் அங்கும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதபின்னர், இந்திப் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர் மறைப்பதற்கு முன் இங்கிலீஸ் விங்கிலீஸ் , மாம் ஆகிய படங்களில் நடித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவரவுள்ளதாகவும், தி லைப் ஆஃப் ஏ லெஜண்ட் என்ற பெயரில் தீரஜ்குமார் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.