Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் 16வது நாள் சடங்கு நிகழ்ச்சியில் அஜித்-ஷாலினி

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (13:55 IST)
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் திடீரென துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. மும்பையில் அவரது இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு இன்று 16-ம் நாள் சடங்கு நடத்தப்பட்டது. இந்த சடங்கில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஷாலினி மும்பை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ரீதேவியுடன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் அஜித் நடித்திருந்தாலும் இருவரும் குடும்ப அளவில் நெருக்கமானவர்கள். அஜித் குறித்து பெருமையாக ஸ்ரீதேவி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அஜித், ஷாலினி இருவரும் ஸ்ரீதேவியிடம் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை போனில் நலம் விசாரித்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments