Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் - ஹோட்டலில் நடந்தது என்ன?

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் - ஹோட்டலில் நடந்தது என்ன?
, திங்கள், 5 மார்ச் 2018 (10:19 IST)
ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

 
இந்நிலையில், துபாயில் என்ன நடந்தது என அவரின் கணவர் போனி கபூர் கூறிய விஷயங்களை திரைத்துறை வர்த்தக விமர்சகர் கோமல் நாஹ்தா தனது இணையதள ப்ளாக்கில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
துபாயில் தனது உறவினரின் திருமணம் முடிந்த பின், தனது மகள் ஜான்வி விரும்பிய சில பொருட்களை வாங்குவதற்காக ஸ்ரீதேவி அங்கேயே தங்க, அவரது கணவர் போனிகபூர் மும்பை திரும்பி விட்டார். அதன் பின், கடந்த 24ம் தேதி காலை ஸ்ரீதேவியிடம் போனிகபூர் தொலைபேசியில் பேசிய போது, “பாபா நீங்கள் என்னுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது” என ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
 
இதனால், மனைவி மீது அதீத காதல் கொண்டிருக்கும் போனி கபூர், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீண்டும் துபாய் செல்ல விரும்பினார். இதுபற்றி ஸ்ரீதேவிக்கு எந்த தகவலும் கொடுக்காமல், பிற்பகல் 3.30 மணிக்கு விமானம் ஏறிய போனி கபூர் மாலை 6.20 மணிக்கு துபாய் சென்றார். அதன்பின் ஸ்ரீதேவி தங்கியுள்ள ஓட்டலறைக்கு சென்ற கபூர், தன்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி அறைக்கதவை திறந்தார்.
 
கணவரை கண்ட ஸ்ரீதேவி இன்ப அதிர்ச்சியில் அவரை கட்டித்தழுவி முத்தமிட்டுள்ளார். அதன் பின், இரவு விருந்துக்கு வெளியே போகலாம் என போனி கபூர் கூற, குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஸ்ரீதேவி குளியலறைக்கு சென்றுள்ளார். 
 
20 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்த போனி கபூர், அன்று சனிக்கிழமை என்பதால் ஹோட்டல் நிரம்பி வழியும். எனவே, சீக்கிரம் குளித்துவிட்டு வரும்படி குரல் கொடுத்துள்ளார். ஆனால், ஸ்ரீதேவியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, பதட்டமடைந்த போனிகபூர் கதவை திறக்க முயன்றார். உள்பக்கம் தாழிடப்படாததால் கதவு உடனே திறந்தது.
 
அங்கே அவர் கண்ட காட்சி அவரை தூக்கி வாரிப்போட்டது. குளியல் தொட்டியில் நிரம்பிய நீரில், உடல் முழுவதும் மூழ்கிய நிலையில் ஸ்ரீதேவி கிடந்தார்.  சில நிமிடங்கள் என்ன செய்தென்று தெரியாமல் திகைத்து நின்றார். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற ஸ்ரீதேவி மரணத்தை தழுவிய காட்சியால் போனிகபூர் உருக்குலைந்து நின்றார்.
 
என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயேந்திரரின் சிலை எங்கு வைக்கப்படுகிறது தெரியுமா? சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை தகவல்