முதல் படத்திலேயே டப்பிங் பேசும் ஸ்ரீலீலா… த்ரிஷா & நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

vinoth
புதன், 19 நவம்பர் 2025 (12:48 IST)
தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வளர்ந்து வருகிறார் ஸ்ரீலீலா. பாலகிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த பகவந்த் கேசரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. நடிப்பு, நடனம் என இரண்டிலும் கலந்துகட்டி அடித்து ரசிகர்களிடம் அப்லாஸ் பெற்று வருகிறார் ஸ்ரீலீலா.

தற்போது தமிழிலும் அவர் பராசக்தி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் அவர் 1960 களின் காலகட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்ட தமிழ் மாணவியாக நடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது தனது காட்சிகளுக்கான டப்பிங்கை அவரேப் பேசுகிறார். இது சம்மந்தமானப் புகைப்படத்தைப் படக்குழு பகிர்ந்துள்ளது.

தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஸ்ரீலீலா தன்னுடைய முதல் படத்திலேயே டப்பிங் பேசுகிறார். ஆனால் 20 வருடமாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இன்னமும் டப்பிங் பேசாமல் உள்ளனர் என அவர்கள் மேல் ரசிகர்கள் விமர்சனம் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments