Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டைய கிளப்பிய ஸ்கிவிட் கேம்ஸ் சீரிஸ்… விரைவில் தமிழ் டப்பிங்!

Advertiesment
பட்டைய கிளப்பிய ஸ்கிவிட் கேம்ஸ் சீரிஸ்…  விரைவில் தமிழ் டப்பிங்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:43 IST)
கொரியன் வெப் சீரிஸான ஸ்கிவிட் கேம்ஸ் வெளியாகி சில வாரங்களுக்குள்ளாகவே உலக அளவில் கவனம் ஈர்த்தது.

கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த சீரிஸ்க்கு கிடைத்துவரும் வரவேற்பை அடுத்து தமிழ் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றனவாம். ஏற்கனவே இந்தி ஆடியோ வெர்ஷன் வெளியாகிவிட்ட நிலையில் டிசம்பர் மாதத்தில் தமிழ் டப்பிங் வடிவம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கலக்கும் டாக்டர் திரைப்படம்!