ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'ஸ்பைடர் மேன், 'கேப்டன் மார்வெல்',‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்’!

சனி, 19 ஜனவரி 2019 (11:00 IST)
தார், ஹல்க், ஒண்டர் உமன், ஆண்ட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்,பேட்மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பேந்தர், அயன் மேன்,  அகுவாமேன் உள்பட ஏராளமான  சூப்பர் ஹீரோ படங்கள் வந்துள்ளன. இவை அனைத்துமே வசூலை வாரி குவித்தன.


 
திகில், திருப்பம், சுவாரஸ்யம், விறுவிறுப்பான திரைக்கதை, ஆபத்தான நேரத்தில் புத்திகூர்மையுடன் செயல்படும் ஹீரோ, நம்பும்படியாக கிராபிக்ஸ் காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, என ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை மக்கள் விரும்பி பார்க்க பல காரணங்களை சொல்லலாம். 
 
இந்நிலையில் ‘கேப்டன் மார்வெல்’ படம் மார்ச் 8-ந் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது இப்போது கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 
கேப்டன் மார்வல் கதாபாத்திரத்தில் பிரை லார்சன் நடித்துள்ளார். சாமுவேல் ஜாக்சன், ஜுட் லா, பென் மெண்டல்சன், லீபேஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அனா பாடன், ரைன் பிளேக் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
 
‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் ஏப்ரல் 26-ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் ராபர்ட் டோனி ஜூனியர், கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், ஹிரிஷ் எவெனஸ், மார்க் ரெபெல்லோ ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர். 
‘ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்’ படம் ஜூலை 5-ந் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் கடந்த வியாழக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். கடந்த 2017-ல் வெளியான ஸ்பைடர் மேன் படத்தில் மைக்கேல் ஹீட்டன் வில்லனாக வந்தார். புதிய படத்தில் வில்லனாக ஜேக் ஜில்லன்ஹால் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இசைக்கான கட்டுப்பாடுகள் சினிமாவில் அதிகம்: ஏ.ஆர்.ரகுமான்