புதிய மற்றும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிமுக நிகழ்சசி மும்பையில் நடந்தது.
இதில் அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பேசுகையில்:-
“யூடியூப்பில் நான் சிறப்பான தனி இசைப்பாடல்களை கேட்டு இருக்கிறேன். அந்த பாடல்களை உருவாக்கிய இசை கலைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆங்கில இசை கலைஞர்களையும், தனி இசை கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். தனி இசை கலைஞர்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும். தனி இசைப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
மக்கள் சிந்தனை சிறிய வட்டத்துக்குள் இருக்கக்கூடாது. அவர்கள் கற்பனை தூண்டப்பட வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் கட்டுப்பாடு, விதிமுறைகள் இருக்கக்கூடாது. திரைப்படங்களில் இடம்பெறும் இசை சிறப்பானது. ஆனாலும் நடிகர், நடிகை, கதை, இயக்குனர் என்று இசைக்கான கட்டுப்பாடுகள் அங்கு அதிகம். ஆனால் தனி இசையில் அப்படி இல்லை. அங்குள்ள கற்பனைக்கு எல்லை கிடையாது.” இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.