Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் 'ஜப்பான்' படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (20:30 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி.  இவரது 25 ஆவது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கிய  நிலையில், இப்படம்   நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது.

தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் இதே தேதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படமும் தீபாவளியையொட்டி ரிலீஸாகிறது.

எனவே வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது அரசு.

முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும் சிறப்புக் காட்சியோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு  அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கும் அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments