Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அப்பாவின் குரலை AI மூலம் பயன்படுத்த கூடாது: எஸ்பிபி மகன் அறிவிப்பு..!

Advertiesment
spb - spbalasubramaniam

Mahendran

, வியாழன், 28 நவம்பர் 2024 (10:06 IST)
மறைந்த பாடகர்களின் குரலை  AI மூலம் பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், "எனது அப்பாவின் குரலை AI மூலம் பயன்படுத்த அனுமதி தரமாட்டேன்," என்று பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தெரிவித்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சில திரைப்படங்களில் மறைந்த பாடகர்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, வேட்டையன் படத்தில் இடம்பெற்ற "மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டதே குறிப்பிடத்தக்கது. 
அதேபோல், கோட் படத்தில் பவதாரணி பாடல் இடம் பெற்றது. மேலும், ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகிலின் குரலை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியிருந்தார்.
 
இந்த நிலையில், "எனது அப்பாவின் குரலை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்த பலர் என்னிடம் கேட்டு வருகின்றனர்," என்று எஸ்.பி.பி மகன் சரண் கூறினார். "எந்த நிலையில் இருந்தாலும், நான் யாருக்கும் எனது அப்பாவின் குரலை AI மூலம் பயன்படுத்த அனுமதி கொடுக்க மாட்டேன். அவரது குரலை AI தொழில்நுட்பத்தில் கேட்க எங்களுக்கு விருப்பமில்லை. AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் குரல் உணர்வு பூர்வமாக இருக்காது," என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?