VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

Prasanth K
வியாழன், 6 நவம்பர் 2025 (09:26 IST)

பிக்பாஸ் சீசன் தொடங்கியது முதலாக விஜே பாரு போடும் சண்டைகளே ப்ரோமோவாக வந்துக் கொண்டிருந்த நிலையில் அவரை மிஞ்சும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளார் திவ்யா கணேஷ்.

 

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு மாத காலமாக கூச்சல், குழப்பமாகவே நீடித்து வந்தது. இந்நிலையில்தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், சாண்ட்ரா உள்ளிட்டவர்கள் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் வந்த பிறகு சண்டை போட்டாலும் ஒருவர் பேசுவது ஒருவருக்கு புரியும் விதமாக ஆடியன்ஸுக்கு கேட்கும் விதமாக இருக்கிறது என்பது சற்று நிம்மதி

 

ஆனால் தற்போது ஹோட்டல் டாஸ்க்கில் விஜே பாரு மொத்தமாக அமைதியாகிவிட்டது ஹவுஸ்மேட்ஸையும், ஆடியன்ஸையும் ஷாக் ஆக்கிவிட்டது. ஒருவேளை விருந்தினரிடம் நல்ல பெயர் எடுத்து ஸ்டார்களை பெறுவதற்காக இப்படி அவர் நடித்துக் கொண்டும் இருக்கலாம்.

 

நாளாக நாளாக திவ்யாவின் கோபமான பேச்சு பிக்பாஸ் வீட்டை கலவரமாக்கி வருகிறது. ஹோட்டல் ஊழியர்களாக செயல்பட்ட ஹவுஸ்மேட்ஸிடம் அவர் கடுமையாக நடந்துக் கொண்ட விதம் நேற்று விமர்சனத்திற்குள்ளான நிலையில் அவரை மேனேஜர் பதவியிலிருந்து நீக்கிய பிக்பாஸ், அவருக்கு பதிலாக ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்த விக்கல்ஸ் விக்ரமை மேனேஜராக அறிவித்தார்.

 

இதை தாங்கிக் கொள்ள முடியாத திவ்யா, மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து தன்னை கார்னர் செய்வதாக பேசத் தொடங்கிவிட்டார். விஜே பாருவும் ஆரம்பத்தில் நன்றாக விளையாடிவிட்டு பின்னர் மற்றவர்களுடன் சண்டை வந்தபோது இந்த கார்னரிங் விசயத்தில்தான் லாக் ஆனார். அதன்பின்னர் அந்த மனநிலையை விட்டு வெளியே வராமல் வெறுப்பேற்றும் கேமை விளையாடினார். 

 

தற்போது திவ்யா இந்த மனநிலைக்குள் சென்றுள்ளதால் இனி வரும் வாரங்களில் அவர் விஜே பாருவை விட மோசமான போட்டியாளராக மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் கூட சம்பந்தமே இல்லாமல் சபரியிடம் அவர் எகிறியது தெரியவந்துள்ளது. மற்றொரு புறம் இது பழைய ஹவுஸ்மேட்ஸ் சேர்ந்து புதியவர்களை ஓரம் கட்டும் முயற்சியாக சொல்லப்பட்டாலும் மற்றவர்கள் அவர்களோடு இணக்கமாகியுள்ளதாகவே தெரிகிறது. இந்த வீட்டின் சவுண்ட் பார்ட்டி விஜே பாருவா? திவ்யாவா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக்கின் மார்க்கெட்டை அவரேதான் அழித்துக் கொண்டார்… பிரபல நடிகர் & இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?... உலகக் கோப்பை எல்லாம் பெரிதில்லை – ரொனால்டோ கருத்து!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி- சுந்தர் சி கூட்டணி… என்ன எதிர்பார்க்கலாம்?

ப்ரதீப்பை நான் ஒரு ஸ்டாராகதான் பார்க்கிறேன்… சக நடிகர் கவின் பாராட்டு!

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments