Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"சூரரை போற்று" படத்தின் ஜுக்பாக்ஸ் ரிலீஸ்!

, புதன், 11 நவம்பர் 2020 (20:01 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "சூரரை போற்று" படத்தின் பாடல் ஜுக்பாக்ஸ்.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 (நாளை )ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் மொத்த பாடல்கள் அடங்கிய ஜுக்பாக்ஸ் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதில் மண்ணுருண்ட, வெய்யோன் சில்லி, காட்டு பயலே , சூறாவளி , நாலு நிமிஷம், ஆகாசம் , மாறா தீம், உசுரே என மொத்தம் 8 பாடல்கள் அடங்கிய இந்த ஜுக்பாக்ஸ்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டிலேயே சிம்பிளாக மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நகுல்!