Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Advertiesment
Mandaadi Tamil Movie

Prasanth Karthick

, ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (11:50 IST)

சூரி நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலகலப்பாக பேசியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பரோட்டா சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் காமெடி தாண்டி ஆக்‌ஷன் ரோலும் தன்னால் செய்யமுடியும் என நிரூபித்த சூரி, தொடர்ந்து கருடன், மாமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது அடுத்த படமான மண்டாடி, மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியதாக உள்ளது. இதில் சூரி ஒரு மீனவனாக நடிக்கிறார், மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சாச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “சூரியால் எந்த கதாப்பாத்திரமாகவும் நடிக்க முடியும். கிராமத்தில் இருந்து வந்த அவரின் உடல்வாகு அதற்கு பக்க பலமாக இருக்கிறது. சூரி உடல் அளவிலும், மனதளவிலும் வலிமையானவர். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் சக்தி கொண்டவர்” என்று சொல்லி சிரித்தார்.

 

சூரி சீரியஸ் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதுடன், வசூலையும் பெறுவதால் மண்டாடி படமும் பார்வையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை