நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.
சந்தானம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தில்லுக்கு துட்டு வரிசை படங்கள். அந்த படங்களின் நான்காவது பாகமாக 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. முதல் வார இறுதியில் இந்த படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவில் வசூலித்தது.
ஆனால் அதற்கடுத்து வந்த வார நாட்களில் வசூல் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. வார நாட்களில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்யவே தடுமாறுவதாக சொல்லப்பட்கிறது. இதே நிலைதான் சூரியின் மாமன் படத்துக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களின் வசூலும் 15 கோடி ரூபாயைத் தாண்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது.