சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று, என்ற திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதும் நேரடியாக ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படம் சர்ஃபைரா என்ற பெயரில் உருவான நிலையில் சூர்யா கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்திருந்தார் என்பதும் சூர்யா இந்த படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிக மோசமான வசூல் கிடைத்திருப்பதாகவும் குறிப்பாக பல திரையரங்குகளில் ஒரு ஆடியன்ஸ் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல் நாள் இந்த படம் இந்தியா முழுவதும் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதா கூறப்படுவதால் இந்த படம் படுதோல்வி என்று கூறப்பட்டு வருகிறது. சூரரை போற்று படமே திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக தோல்வி அடைந்திருக்கும் என்றும் ஒரு பயோபிக் திரைப்படம் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் தான் இந்த படம் என்றும் சில விமர்சனங்கள் கருத்து தெரிவித்திருந்தனர்