Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும்2’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (10:52 IST)
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் வெளியான முழுநீள ப்ளாக் காமெடி என்ற பெருமையை சூதுகவ்வும் பெற்றது. அதற்கு முன்னர் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் ஆரண்ய காண்டம் (சில காட்சிகள்) ஆகியவை வெற்றிப் படமாக அமையவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். எஸ் ஜெ அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிக் கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“வளர்ந்து வாங்க ரமணா 2 எடுப்போம்… “ சண்முகபாண்டியனை வாழ்த்திய இயக்குனர் முருகதாஸ்!

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments