Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

Advertiesment
Sonu sood snake

Prasanth K

, திங்கள், 21 ஜூலை 2025 (12:21 IST)

பிரபல இந்தி நடிகரான சோனு சூட் தனது வீட்டுக்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்றை லாவகமாக கையில் பிடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

 

இந்தியில் பிரபல வில்லன் நடிகராக உள்ளவர் சோனு சூட். தமிழில் ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட பல படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் சோனு சூட். கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்தது, விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்தது என பலருக்கு உதவியதன் மூலமாக மக்களிடையெ பெரிதும் பிரபலமானார். 

 

சமீபத்தில் சோனு சூட்டின் மும்பை வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. ஆனால் அதை கண்டு மிரளாத சோனு சூட் அதை லாவகமாக வெறும் கைகளாலேயே பிடித்துள்ளார். அதோடு அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த சிலர் சோனு சூட் இவ்வாறு செய்வது தவறு என கூறியுள்ளனர்.

 

இதை பார்த்து இதேபோல பாம்பை வெறும் கைகளால் பிடித்து வீடியோ எடுக்க சிலர் முயலலாம், சோனு சூட் இதுபோன்ற ஆபத்தான காரியங்களுக்கு முன் உதாரணமாய் இருக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள சோனு சூட், பாம்புகள் ஆபத்தானவை என்றும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.k


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!