Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் தலைமையில் சினேகனுக்கு டும் டும் டும்!

Advertiesment
கமல் தலைமையில் சினேகனுக்கு டும் டும் டும்!
, வியாழன், 20 மே 2021 (18:39 IST)
திரை இசை பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடக்க உள்ளதாம்.

திரைப்பாடலாசிரியராக பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். அதுமட்டுமில்லாமல் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் தலைகாட்டியுள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டு இருக்கும் நிலையில் சினேகன் மட்டும் ஆணி அடித்தாற்போல கட்சியில் இருக்கிறார். இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், அது கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடங்காதே திரைப்படத்துக்கு 190 கட்டாம்… அடிமடியில் கைவைத்த சென்ஸார்!