கமல் முன் கால்மேல் கால் போட்டு பேசலாமா? சினேகன் ஆவேசம்

புதன், 12 செப்டம்பர் 2018 (09:43 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் நுழைந்துள்ளதால் பிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்தாஜ் ஒருசில சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதை அவர்கள் கண்டித்து வருகின்றனர். இதனால் மும்தாஜ் எரிச்சல் அடைந்துள்ளார். அவரை கார்னர் செய்யும் வகையில் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் நடந்து கொண்டு வருகின்றனர்.

 
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் முன் சினேகன் பேசியபோது, 'கமல் சாருக்கு என்று ஒரு கவுரவம் உள்ளது. அவர் முன் கால் மேல் கால் போட்டு ஒருசிலர் பேசி வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாக உள்ளது. இங்கு உங்களை திட்டினாலும் மக்கள் முன் உங்களுக்காக அவர் எவ்வளவு வேண்டுகோள் வைப்பார் என்று எங்களுக்குத்தான் தெரியும்

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்று கூறித்தான் இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் உங்களில் சிலர் அதை செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் சினேகன் கூறினார். சினேகன் கூறியதற்கு மும்தாஜ் கண்ணீர் வடிக்கின்றார். கண்ணீர் வடிக்கும் அளவுக்கு சினேகன் கூறியதில் எதுவும் இல்லாதபோது அவர் ஏன் கண்ணீர் விடுகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை இதுவும் ஒரு நாடகமா?

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் 'மெர்சல்' ரிலீஸா?