16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர் இவரா!

செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (18:21 IST)
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி மூவரும் நடித்த முக்கியமான வரலாற்று படம்  16 வயதினிலே. இப்படத்தில் கமல்ஹாசனின் சப்பானி  வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மரகதக்காடு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய பாரதிராஜா, "மரகதக்காடு படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்க்கும்போது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி வேடத்தில் நடிக்க தேர்வு செய்ததேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது.
 
இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்க  வைக்க முடிவு செய்திருந்தேன்.
 
படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன் " என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை