Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 22 April 2025
webdunia

கர்ப்பமாக இருந்த போது சிரமம் பட்ட சினேகா - வைரல் வீடியோ இதோ!

Advertiesment
Pattas  Release Date
, சனி, 18 ஜனவரி 2020 (15:10 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார். 
 
சமீபத்தில் தனுஷிற்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில்  தாயின் உணர்வும், கலையின் மீது உள்ள ஆர்வத்தையும் அழகான காண்பித்து நடித்திருந்தார். இந்த படம் பெண்கள் தினத்தில் ஸ்பெஷலாக கடந்த 16ம் தேதி வெளியாக நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல கலெக்ஷனை ஈட்டியது. 
 
இது குறித்து  இயக்குனர் துர குமார் கூறியது, இப்படத்தில் சினேகா மேடத்தின் உழைப்பு ரொம்ப அதிகம் என்று சொல்லலாம். அடி முறையை சினேகா மேடம் ஈசியாக கற்றுக் கொண்டார். சண்டை போடுகிற காட்சிகளிலும் சூப்பர் ஆஹ் பண்ணிட்டு வந்தங்க. அதன் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் சினேகா மேடம் கர்ப்பமாக இருந்தார். அந்த நேரத்தில் அவரை  எப்படி வேலை வாங்குவது என எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், அவர் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நைட் ஷுட், பயிற்சி என எல்லாமே செய்து கொடுத்து எங்களுக்காக எல்லா காட்சிகளையும் அருமையாக நடித்தார் என்று பெருமிதமாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டறையில் முரட்டுக்குது 2 படத்தில் மியா கலீபா...?