வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் இப்போது இந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் வெற்றிக் கூட்டணி முதன் முதலாக கைகோர்த்த படம் பொல்லாதவன். அதன் பிறகு அவர்கள் கூட்டணியில் உருவான ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என அனைத்துப் படங்களுமே கோலிவுட் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படங்கள்தான்.
இந்நிலையில் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து பொல்லாதவன் படம் இந்தியில் ’கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சேகர் சூரி இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 28ஆம் தேதி பிரமாண்டமாக இந்த படம் ரிலீசாக உள்ளது. பொல்லாதவன் திரைப்படம் இதற்கு முன்னதாக கன்னடம் தெலுங்கு பெங்காலி சிங்களம் என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து. அசுரன் படத்தின் 100 ஆவது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.