Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுப்பேட்டை படத்தில் நடிக்க தயங்கினேன்.. என் அப்பாதான் நடிக்க சொன்னார்- சினேகா பகிர்ந்த சம்பவம்!

Advertiesment
புதுப்பேட்டை படத்தில் நடிக்க தயங்கினேன்.. என் அப்பாதான் நடிக்க சொன்னார்- சினேகா பகிர்ந்த சம்பவம்!

vinoth

, வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:39 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி  சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதையடுத்து சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த ஒரு நேர்காணலில் “புதுப்பேட்டை படத்தின் கதையைக் கேட்க, நான் என் அப்பாவோடு சென்றிருந்தேன். அந்த கதையைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் நான் குழப்பமாக இருந்தேன். அப்போது என் அப்பா, ‘பல இந்தி படங்களைக் காட்டி அதில் எல்லாம் முன்னணி நடிகைகள் எல்லாம் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர் கதையில் உன்னைத் தவறாகக் காட்ட மாட்டார் என நினைக்கிறேன்’ எனக் கூறினார். அதன்பின்னரே நான் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். படம் ரிலீஸான போது ஒருவர் மட்டுமே எனக்கு போன் செய்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தாய் எனக் கேட்டார். அவர் யார் என நான் சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமதம் ஆகும் சூர்யா 45 படப்பிடிப்பு… காரணம் இதுதானா?