சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த சென்சேஷனல் நடிகை!

vinoth
வியாழன், 30 அக்டோபர் 2025 (13:10 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதவாக்கில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் அல்லது பிரேம்ஜி ஆகிய இருவரில் ஒருவர்தான் இசையமைப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக லோகா புகழ் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்முக்கு ஹீரோயின் ஆகும் மீனாட்சி சௌத்ரி… வில்லனாக சத்யராஜ்!

ஜெயிலர் 2 படத்தில் இணைந்தாரா சந்தானம்?... இணையத்தில் பரவும் தகவல்!

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments