Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் மாநாடு மேஜிக் நடக்குமா?... விஜய் 68 படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனா?

மீண்டும் மாநாடு மேஜிக் நடக்குமா?... விஜய் 68 படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனா?
, புதன், 24 மே 2023 (08:31 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்தில் மன்னா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமன்னா விஜய்யோடு சுறா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மேலதிக தகவலாக படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக்கி படம் இயக்க ஆசைப்பட்ட மூன்று இயக்குனர்கள்!