Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தினார்!

Advertiesment
நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தினார்!
, புதன், 23 நவம்பர் 2022 (09:08 IST)
தமிழ் சினிமாவின் பிரபலமான கதாநாயகியான ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தியுள்ளார்.

பரதநாட்டிய குருவான கிரிஜா பக்கிரிசாமி, நடன உலகில் பிரசித்தி பெற்றவர். அதுமட்டுமில்லாமல், இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவரின் மகள்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீப்ரியா. இவருக்கு ஸ்ரீப்ரியா தவிர்த்து இன்னொரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் வயது மூப்புக் காரணமாக தற்போது இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 88. அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங் முடியும் முன்னரே அமெரிக்க ரிலீஸ் உரிமையைக் கன்பார்ம் செய்த ஷங்கர்- ராம்சரண் படம்!