Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸூ...ஷூட்டிங்கில் கிரிக்கெட் விளையாடிய விஜய்..வைரல் வீடியோ

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (19:33 IST)
வாரிசு பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை  பாடலாசிரியர்  விவேக் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில்,  The G.O.A.T. என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய்,ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் வாரிசு பட ஷூட்டிங்கின்போது கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.

வாரிசு பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பாடலாசிரியர் விவேக், யோகிபாபு மற்றும் படக்குழுவினர் இணைந்து கிரிக்கெட் விளையாடினர்.

வாரிசு பட ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இந்த படம் ரிலீஸாகி, நீண்ட நாட்கள் கழித்து, பாடலாசிரியர் விவேக் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் விவேக் சிக்சஸ் அடித்தபோது விஜய் சிக்ஸர் என்று குரல் எழுப்பியதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு வெளியான வாரிசு படத்தை தில்ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கியிருந்தார். இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments