Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிகட்டத்தை எட்டிய சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இறுதிகட்டத்தை எட்டிய சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, வெள்ளி, 29 ஜூலை 2022 (09:10 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வெளியாக உள்ளது பிரின்ஸ் திரைப்படம்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் படமாக்கப்பட்டதும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடியும் என்று சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்- ஷங்கரின் இந்தியன்-2 பட முக்கிய தகவல்